ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காமல் இருக்க முடியாது என அமெரிக்காவை தவிரப் பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள நிலையில், பல்வேறு தடைகள் விதித்த பின்பும் உலக நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மார்ச் 22ஆம் தேதிக்கு பின்பு 7வது முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 70 பைசாவும் உயர்ந்துள்ளது.