தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே. இயக்கியுள்ள படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஜீவா வசனம் எழுதியுள்ளார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜே.எஸ்.கே. கூறும்போது, “உண்மையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நான் எழுதிய கதை இந்தப் படம். நான்கு பெண்களைப் பற்றிய கதை. இதைப் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கிறேன். இதில் 4 பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அனைவருக்கும் காட்சிகள் சமமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அழுத்தமான விழிப்புணர்வு நிச்சயம் இருக்கும். பெண்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.