கோவை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்துகொண்டு இருப்பதை மறைப்பதற்காக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''தமிழகத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி. தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என மத்திய அரசு கூறிவிட்டது. தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும். திமுக ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என கூறுகின்றனர்.