படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் உள்ள, மாநிலத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.