விழுப்புரம்: ‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: > வளங்கள் – வாழ்வாதாரங்களை பாதுகாப்போம். மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம். பேரிடராக வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய அரசியல் கடமை.