பாபா சாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் இன்று. தேசம், தேசியம், சமூகம் மற்றும் விடுதலை போன்ற கருத்துகளில் அவருக்கு அதிக நம்பிக்கை இல்லை. காந்தியுடனான உரையாடல் ஒன்றில், “எனக்கு தாய் நாடு என்று ஒன்று இல்லை. சுயமரியாதை கொண்ட எந்த ஒரு ஒடுக்கப்பட்ட நபரும், தன்னை நாய்களுக்கும் பூனைகளுக்கும் கேடாக நடத்தும், குடிக்க நீர் கூட கிடைக்காத ஒரு நிலம் குறித்து பெருமைப்படமாட்டார்,” என்று கூறினார்.