பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நொச்சிக்குளம் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவர் பானுமதி. ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் ஊராட்சி செயலர் பானுமதி நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உத்தரவின் பேரில் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
இதுகுறித்து கலெக்டருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை அளித்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஊராட்சி செயலாளர் பானுமதியை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டு ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பெரம்பலூர் அருகே நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.