சென்னை: பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஒசூரில் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார். எங்களை போல் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேறவும், இன்று பேசவும் பெரியாரே காரணம் எனவும் அவர் பேசியுள்ளார்.
The post பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.