கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே லால் பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் முஹமது ஜகரிய்யா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசகர் மருத்துவர் அப்துஸ்ஸமது, அனீசுர் ரஹ்மான், மஸ்ஹீது அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்‌.திருமாவளவன் எம்.பி, தேசிய அமைப்பு செயலாளர் முஹம்மது பஷீர் எம்.பி, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.