கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசினர்.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புக்கும், கண்காணிப்புக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய கண்காணிப்புக் குழுவை நியமித்து இருந்தது. இந்நிலையில் இக்குழு கலைக்கப்பட்டு கடந்த நவம்பரில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையம் 7பேர் கொண்ட புதிய மேற்பார்வைக் குழுவை நியமித்தது.