விண்வெளியில் இருந்து விழும் அபூர்வமான விண்கற்களைத் தேடிக் கண்டுபிடித்து விற்பனை செய்யும் ‘விண்கல் வேட்டை’ தற்போது ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. இந்த வர்த்தகம் விண்கற்களின் அறிவியல் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தினாலும், அரிய வகை மாதிரிகள் தனியார் சேகரிப்பாளர்களுக்குச் செல்வதால் அறிவியல் ஆய்வுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

