பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் பும்ரா 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் கைப்பற்றினார். அவரது அந்த அபார பந்துவீச்சு இந்த வெற்றியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.