சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு கே.புத்தூர் மலைக்கிராமம் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (35). இவர்களுக்கு தீபக் (15), காமேஷ் (12) ஆகிய 2 மகன்கள். தீபக் 10ம் வகுப்பும், காமேஷ் 8ம் வகுப்பும் கொம்புதூக்கியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மதியம் 1 மணிக்கு வெங்கட்ராமன், தனது மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் தீபக், காமேஷ் ஆகியோருடன் புளியங்காடு அருகில் உள்ள வாணியாறு நீரோடைக்கு குளிக்கச் சென்றார். அங்கு கணவன், மனைவி இருவரும் துணிகளை துவைக்க சோப்பு போட்டுக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் இருவரும் ஓடையில் இருந்து தண்ணீரை வெளியே இறைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென இருவரையும் காணவில்லை. அவர்களை தேடியபோது, சற்று ஆழமான குழியில் தீபக், காமேஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர்.
The post பெற்றோர் கண் முன் ஓடை நீரில் மூழ்கி 2 மகன்கள் பலி appeared first on Dinakaran.