காசா: இஸ்ரேல் – காசா மீது ராணுவ தாக்குதல்களை தொடங்கியது முதல் 2018, 2012, 2014 மற்றும் 2021ல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் பல்லாயிரகணக்கான வீடுகள், பள்ளிகள், அலுவலங்க கட்டிடங்கள் அளிக்கப்பட்டது. 2008 தொடங்கி 2021வரைலான காலகட்டத்தில பாலஸ்தீனார்கள் 21,510 பேர் கொல்லப்பட்டார்கள், இஸ்ரேளிகள் 1,508 பேர் கொல்லப்பட்டார்கள். இதனை தொடர்ந்து அக்டோபர் 7, 2023ஆம் ஆண்டில் ஹமாஸ் இஸ்ரேலில் மீது சற்றும் எதிர்பாராத ஒரு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 1,039 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலும் பொதுமக்கள். மேலும் சுமார் 240 பேர் சிறைபிடிக்க பட்டார்கள். பாலஸ்தீனார் மக்களுக்கு எதிரான அனைத்து இஸ்ரேலிய சாதித்திட்டங்கள் எதிர்கொள்ள ஒரு அவசியமான நடவடிக்கை தான் இந்த தாக்குதல் என ஹமாஸ் அப்போது அறிக்கை விளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை பதிலடி கொடுக்க தூண்டியது.
அக்டோபர் 3, 2023 அன்று ஹமாஸ் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்த தொடங்கியது. தற்போது வரைக்கும் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரில் 58,000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் 11,000 மேற்பட்ட குழைந்தைகள் இறந்துள்ளனர். காசா – இஸ்ரேல் போரில் உலக நாடுகள் பலதரப்பு கருத்துக்களை முன்வைக்கின்றனர். வரலாற்றில் நீண்ட காலம் நடந்து வரும் மோதல் என்றாலும் உலக முழுவதும் இருந்து இந்த போருக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அரசு முடிவையே எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
இஸ்ரேளுக்கு உறுதுணையாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றனர். துருக்கி, ரஷ்யா, சீனா, லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலஸ்தீனார்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். குவைத், ஈராக், பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலை கண்டித்து வருகின்றது. மனிதநேயமே கேள்விக்குறியாகும் வகையில் காசா பகுதியில் நிலவும் கடுமையாக உணவு பஞ்சம் மக்களை மரணத்திற்கு வாயிலுக்கு தள்ளக்கூடிய வகையில் அமைந்து இருக்கிறது. பட்டினியால் வாழக்கூடிய ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கள் குடும்பங்களுக்கு உணவு அளிக்க உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் நிவாரண பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் துரத்தி செல்லும் ஒரு அவலநிலை அரங்கேறி வருகிறது.
உலக வாங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைபடி, காசாவில் இருக்கக்கூடிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் உணவு பற்றாக்குறை எதிர்கொள்ளுகிறார்கள். பெரும்பாலான குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூட இல்லாமல் பட்டினியால் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். உணவு பொருட்களை பெறுவதற்காக பாதுகாப்பான என அறிவிக்கப்பட்ட சில விநியோக மையங்களை நோக்கி 1000 கணக்கான மக்கள் தினமும் படையெடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த மையங்களுக்கு செல்ல கூடிய வழிகளிலும் அங்கு உணவுக்காக காத்திருக்கும் போதும் துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி நூறுகணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த சிலவரங்களில் மட்டும் 700க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உணவுக்காக சென்று கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உணவு பற்றாக்குறை என்பது வெறுமனே போரின் விளைவு மட்டுமல்ல, அது போர் உத்தியாகவே பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேல் – காசா மீது விதித்துள்ள நிவாரண பொருட்கள் கட்டுப்பாடுகள் நிலவையை பெரும் மோசமாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபமான அமைப்புகள் காசாவுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவு பொருட்கள் முறையாக வந்து சேர்வது இல்லை என்றும் இதனால் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து உள்ளது. சுத்தமான குடிநீர் மற்றும் சமையலுக்கான எரிபொருள் இல்லாததால் கிடைக்கும் மிக குறைந்த உணவு பொருட்களையும் சமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
காசா மக்கள் பசியால் வடி உயிர்காக போராடும் இந்த அவலநிலை உலக மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க காசாவில் உள்ள மயானங்களில் இடம் இல்லாததால் போரில் உயிழந்த பாலஸ்தீனார்கள் காலியிடங்களில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் இடம் பற்றாக்குறைக்காக பெரும்பாலான மயானங்கள் மூடப்பட்டுள்ளன. போரில் உயிரிழந்த குடுபத்தினரை அடக்கம் செய்ய உரிய இடம் கிடைக்காததால் தற்காலிகமாக கிடைக்கக்கூடிய இடங்களில் அடக்கம் செய்வதாக பாலஸ்தீன மக்கள் வேதனை தெரிவிக்கின்றார்கள். இந்த சூழலில் பேரழிவை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழாமல் இல்லை. அமைதியும், இயல்புநிலை மத்திய கிழக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றன. சமாதானத்துக்காக பார்த்தனைகள் மட்டும் உலககெங்கும் ஓயாமல் ஒளித்து கொண்டு இருக்கிறது.
The post பேரழிவு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரக் கோரி காசா மக்கள் கண்ணீர்: காசா மக்களை மரண வாயலுக்கு தள்ளும் கடும் உணவு பஞ்சம் appeared first on Dinakaran.