புதுடெல்லி: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிவிப்பு மற்றும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்காக, ரூ.1115.67 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, 15 மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தைத் தணிவிப்பதற்கான முன்மொழிவுக்கு தேசிய பேரிடர் தணிவிப்பு நிதியிலிருந்து நிதியுதவி அளிப்பதற்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு தயார்நிலை மற்றும் திறன் கட்டமைப்பின் கீழ் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்புக்கான மற்றொரு முன்மொழிவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின் (NDRF) கீழ் நிதி அளிக்கவும் பரிசீலித்தது.