பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.
சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.