சென்னை: தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான நிதியாக வரும் ஆண்டில் ரூ.3,600 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் 3,378 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன.