சென்னை: பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியுதவியுடன் கூடிய சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (CITS) திட்டத்தின் கீழ் தற்போது பேருந்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிப்போ மேலாண்மை அமைப்பு (DMS) மூலம் பேருந்து குறிப்பேடு தாள்கள் தானாக உருவாக்கப்படுகின்றன.
ஆரம்ப மென்பொருள் மேம்பாட்டு கட்டத்தில், பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் செயல்படுத்தலின்போது, இந்த பேருந்து குறிப்பேடு தாள்கள் முழுமையாக தமிழில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் பேருந்து குறிப்பேடு தமிழில் மட்டுமே உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளது” என்ற செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மறுப்பு..!! appeared first on Dinakaran.