பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 21-ம் தேதி மாநில அரசுப் பேருந்தின் நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரிக்கும் பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கும் இடையே கன்னடத்தில் பேசுவதா? மராத்தியில் பேசுவதா? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் மராத்தியில் பேசுமாறு கூறி, நடத்துநரை தாக்கினர்.