கடலூர்: கடலூர் அருகே எம் புதூரை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு (55). இவர் எம் புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி சுதாவின் கணவர். இவர் நேற்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள தனது முந்திரி தோப்புக்கு, நாகி நத்தம் பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் பிரசாந்த் மனைவி சரண்யா(25), பாலாஜி மனைவி கல்பனா(25) ஆகியோரை தனது பைக்கில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
கிழக்கு ராமாபுரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மூவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி சென்ற கார் டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த பாபுவை(50) தேடி வருகின்றனர்.
The post பைக் மீது கார் மோதி அதிமுக பிரமுகர், 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.