மியாமி: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?” என ட்ரம்ப் பேசியிருந்தது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே கருத்தை முன்வைத்து அவர் பேசியிருக்கிறார்.
இந்த முறை மியாமியில் பேசிய அதிபர் ட்ரம்ப், “இந்தியாவின் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க பைடன் நிர்வாகம் 21 மில்லியன் டாலரை வாரிவழங்கியது ஏன்? அவர்கள் அங்கே வேறு யாரோ தேர்வாக வேண்டும் என்பதற்காகக் கொடுத்திருக்கலாம் என நான் ஊகிக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதை இந்திய அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.