செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பரனூர் சுங்கச்சாவடியில் படையெடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை, செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை, புதன்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என தொடர் பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளன.
இதனால், தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தென்மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால், செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் குழந்தைகள் முதல் முதியவர் வரை குடும்பம் குடும்பமாக பேருந்திற்கு காத்துக்கொண்டுள்ளனர். இதில் நேரமாக அதிகரிக்க மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனை சமாளிக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
The post பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள் appeared first on Dinakaran.