பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஜன. 14-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து வழக்க போல இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து, சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், கடைசி நேரத்தில் சிறப்பு ரயில்களை அறிவிப்பதை தவிர்த்து, முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.