சென்ைன: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ரயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாகனங்கள் அதிக அளவில் வருவதால் முக்கிய சாலைகள், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்பட்டது. அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாள போகி பண்டிகையும்(13ம் தேதி), தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையும்( 14ம் தேதி), 15ம் தேதி மாட்டுப் பொங்கலும், 16ம் தேதி கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. ெபாங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்போர் கடந்த 10ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை முதல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். அவர்கள் ரயில், பஸ், கார்கள், விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து 11ம் தேதி, 12ம் தேதி, 13ம் தேதி என்று தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர்.
இதனால் இந்த தினங்களில் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஹஸ் புல்லானது. மேலும் கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களும் நிரம் வழிந்தது. இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேரத்தில் முன்பதிவில்லா பெட்டிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
இதனால் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரயில், பஸ், கார்கள், விமானம் எனற சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், பொங்கல் பண்டிகையன்று சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் ெவறிச்சோடி காணப்பட்டது. சென்னையின் சாலை போக்குவரத்தின் இதய பகுதியாக கருதப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் குறைவான அளவிலேயே வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது. இதனால், சாலைகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தங்கு தடையின்றி எளிதில் செல்ல முடிந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14ம் தேதி முதல் 19ம் தேதி(இன்று) வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட வழக்கத்தை விட அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தற்போது பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளன. அதே போல அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட உள்ளன. இதனால், விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிந்தது. விடுமுறை முடிந்து எப்படியாவது சென்னைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பாலானவர்கள் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க தொடங்கியுள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் ரயில்நிலையங்களில் வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு தொடர் விடுமுறை முடிந்து தற்போது சென்னையை நோக்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் நேற்று முதல் நாளை வரை ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகளின் இயக்கங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
The post பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து; சென்னை திரும்பும் மக்கள்: ரயில், பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது appeared first on Dinakaran.