சென்னை: பொங்கல் திருநாளையொட்டி 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகையை இன்றே (ஜன.9) வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.