சென்னை: தமிழகத்தில் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர் திருத்தணி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொங்கல் பண்டிகை.. 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: எங்கெங்கு இருந்து கிளம்பும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.