புதுடெல்லி: பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் மார்ச்-2018-இல் 14.58% ஆக இருந்த நிலையில், அது செப்டம்பர்-2024 இல் 3.12% ஆக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கிகளின் சூழல் அமைப்பை அரசு சிறப்பாக ஆதரித்து வருகிறது. ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வளர்ச்சியை பராமரிக்கும் அதே நேரம் பணியாளர் நலனையும் கவனித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், மக்கள் மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட பல சீர்திருத்த முயற்சிகளை இந்தத் திசையில் அரசு எடுத்துள்ளது.