சென்னை: தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளன. காலப்போக்கில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன கட்டுமான முறைகள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாற்றங்களை கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரங்களின் மூலம் மதிப்பீட்டுத் தொகையினை ஒரே மாதிரியாக அனைத்து பொறியியல் கட்டுமானத் துறைகளிலும் மேற்கொள்ளும் வகையில், 8 தொகுதிகள் கொண்ட தரவு விவரப் புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரப் புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெயகாந்தன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) மணிகண்டன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் செல்வதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது appeared first on Dinakaran.