சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.