சென்னை: 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.69% ஆக புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டில் நாட்டின் மற்ற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2024-ல் ரூ.15,71,368 கோடி என மதிப்பிடப்பட்ட உள்நாட்டு உற்பத்தி, 2025-ல் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
The post பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்..!! appeared first on Dinakaran.