பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இன்று 10வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.. சுற்றுலாத்துறை, தனியார் அமைப்பும் இணைந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழாவை நடத்துகின்றனர்.. அமெரிக்கா, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வந்துள்ளன
தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்க விடப்படும்.
பறக்க விடப்படும் பலூன்களை காணவும் அந்த பலூன்களில் ஏறி பயணம் செய்யவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலூன் திருவிழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.. தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு பத்தாவது சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த முடிவு செய்த நிலையில் சென்னை, பொள்ளாச்சி, மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்தவும் முடிவு செய்தனர்.
வெப்ப காற்று பலூன் பறக்க விடப்படும்.
இந்த பலூன் திருவிழாவில் பெல்ஜியம், பிரேசில், இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு பலூன்கள் கொண்டுவரப்படுகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த ஓநாய், யானை, சிறுத்தை, உருவம் கொண்ட பலூன்களும் வெப்ப காற்று பலூன்களும் பறக்க விடப்படும்.
The post பொள்ளாச்சியில் இன்று 10வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது..! appeared first on Dinakaran.