பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுகவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
தமிழக மக்களவை உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.