சென்னை : பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைவரின் மனதிலும் காயமாக இருந்தது. இன்று கிடைத்துள்ள தீர்ப்பு காயத்திற்கு, மருந்தாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் கூறியிருந்தார். முதலமைச்சர் கூறியபடி, திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை. இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை; அதற்காகவே நாங்கள் போராட வேண்டியிருந்தது.”இவ்வாறு தெரிவித்தார்.
The post பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது :திமுக எம்.பி.கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.