சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் போக்குவரத்து வசதி அடிப்படை தேவையாகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றன.