தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 8 கோட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015 மார்ச் மாத நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். அதற்கு பிறகு புதிதாக பணி நியமனம் செய்யப்படாததால், ஓய்வுபெற்றவர்கள் நீங்கலாக தற்போது 1.10 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்த காலகட்டத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.