சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் கட்டணம் செலுத்தி, ஏப்.20-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சங்க உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ்வலம் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள மனை திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.