சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜன.9-ம் தேதி தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: தமிழகத்தில் பிற பொதுத்துறை நிறுவனங்களை ஒப்பிடும்போது, சேவைத்துறையாக இயங்கும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் ஓய்வூதியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.