போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை திருவல்லிக்கேணியில் இது செயல்படுகிறது. இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள், ரூ.10,427 கோடி முதலீடு செய்துள்ளனர். ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.