சென்னை: சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை யில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கி.மீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந் தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.