நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு வெங்கட்ராயபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த அந்தோணி (வயது 83), சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின்பேரில் நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்தோணி மீது வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (27,3,2025) நீதிபதி சுரேஷ்குமார் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.
அதில் போக்சோ வழக்கு குற்றவாளியான அந்தோணிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் மற்றும் நாங்குநேரி போலீசாரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
The post போக்சோ வழக்கு குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு! appeared first on Dinakaran.