போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் திறந்தவெளி மற்றும் விவசாய நிலங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. போச்சம்பள்ளியில் இருந்து மத்தூர் செல்லும் சாலையில் உள்ள பாலஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ மனையில் பயன்படுத்திய கழிவுகளான குளுக்கோஸ் பாட்டில், சிரிஞ்ச், கட்டுத்துணிகள், மாஸ்க், கையுறை உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரத்தில் திறந்வெளியிலும், விளை நிலங்களில் மர்ம நபர்கள் கொட்டிச்சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விளை நிலங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷிணகிரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் கூறுகையில், ‘மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துகின்றனரா என்பதை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் தான் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையில் சேகரமாகும் கழிவுகளை, இதற்காக உள்ள நிறுவனங்கள் மூலம் முறையாக அப்புறப்படுத்த, துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
The post போச்சம்பள்ளியில் திறந்தவெளியில் மருத்துவ கழிவை கொட்டும் கும்பல்: தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.