டெல்லி: போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பல்வேறு பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளன என மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்.பி. வில்சன் உரையாற்றினார்.அதில்,
* ஒன்றிய அரசினால் புறக்கணிப்பையும், ஏற்றத்தாழ்வையும் தமிழ்நாடு தொடர்ந்து சந்தித்து வருவதால், பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் முடங்கியுள்ளன.
* 2023-24 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5% மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது, இது போதுமானதல்ல.
* ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்கான சுமையை மாநில அரசின் மீது ஒன்றிய அரசு படிப்படியாக மாற்றி வருகிறது.
* கடந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு என்பது உத்தரபிரதேசத்திற்கான ஒரு வருட ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு சமமானதாக உள்ளது.
* தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
* பரந்தூர் விமான நிலையம், ஓசூர் விமான நிலையம், கிரீன்ஃபீல்ட் கடலூர் துறைமுகம், கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ திட்டங்கள், கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் மற்றும் பணிகளை ஒன்றிய அரசு விரைவுபடுத்த வேண்டும்.
* தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. ஆயினும்கூட, மாநிலத்திற்கு உரிமையான நிதியினையும் மற்றும் ஆதரவையும் திட்டமிட்டு மறுப்பது மாநிலத்தின் நிதிநிலையை பெரிதும் பாதிக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
The post போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளன: மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்.பி. வில்சன் உரை appeared first on Dinakaran.