நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “ கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட 4 பேரும் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள். வெளிநாட்டில் மரணை தண்டனையை எதிர்கொள்ளும் கனடியர்களுக்கு கனடா தொடர்ந்து கருணையை கோரி வருகிறது. நான்கு நபர்களின் அடையாள விவரங்களை மறைக்குமாறு அவர்களது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார்.