ஊட்டி : ஊட்டியில் ‘போதையில்லா நீலகிரி’ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டி நேற்று நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக போதையில்லா நீலகிரி விழிப்புணர்வு மாரத்தான் நெடுந்தூர ஓட்டபந்தய போட்டி நேற்று நடந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் எச்ஏடிபி., திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நேற்று காலை 8 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பங்கேற்று கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
போதையில்லா நீலகிரி விழிப்புணர்வு மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டியானது 19 வயதிற்குட்பட்ட பள்ளி ஆண்கள் பிரிவில் 8 கிமீ., தூரமும், அனைத்து வயதிற்கான (ஆண்கள்) பிரிவில் 10 கிமீ., தூரமும் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இருபிரிவுகளிலும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவர்கள் ஹரிகரன், மாதவன், முருகன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவர்கள் சாம் பிரசாத், விஷ்ணு, ஜஸ்வந்த், கௌசிக், இசக்கிராஜ், பெரியமாயன், நாகேஷ் ஆகியோர் 4 முதல் 10 இடங்கள் பிடித்தனர். பொதுபிரிவில் நரேந்திரன், கண்ணன், மோனிஷ் விஜயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அன்பு செழியன், கமல்பாண்டி, அஸ்வின், மனோஜ்குமார், சிஜின், ஆகாஸ், கமலேஷ் ஆகியோர் 4 முதல் 10வது இடங்களை பிடித்தனர்.
ஒவ்ெவாரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாவது பரிசாக ரூ.2000 மற்றும் 4வது முதல் 10 இடங்களில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழச்சியில் கலால் உதவி ஆணையர் தனப்பிரியா, கூடுதல் எஸ்பி., மணிகண்டன், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ‘போதையில்லா நீலகிரி’ விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.