ரோம்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்க்கு சில நாட்களுக்கு முன் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து கடந்த வாரம் ரோம், அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போப் பிரான்சிஸ்க்கு(88) சிறு வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. அவருக்கு மூச்சு குழாய் அழற்சி இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த 14ம் தேதி முகம் வீக்கமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மூச்சுக்குழாய் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், நலமுடன் இருப்பதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் மத்தேயு புரூனி தெரிவித்தார்.
இந்நிலையில்,மருத்துவ பரிசோதனையில் போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவருடைய சுவாசக் குழாய்ப் பிரச்னைக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு முன்பு அவர் கடந்த 2023ம் ஆண்டு நிமோனியா பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்றார். போப் பிரான்சிஸ் நேற்றுமுன்தினம் இரவு நன்றாக உறங்கினார். நேற்று காலையில் எழுந்து உணவு சாப்பிட்டார். நாளிதழ்கள் வாசிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளை அவர் செய்து வருகிறார். அவருடைய நிலைமை சீராக உள்ளது. எனினும் கொஞ்ச நாள்களுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
The post போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.