புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.