டெல் அவிவ்: இஸ்ரேல் -ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக காசாவிற்கு அனைத்து உணவு மற்றும் பிற பொருட்கள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால் கூடுதல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இஸ்ரேஸ் எச்சரித்துள்ளது. பட்டினியை ஆயுதமாக பயன்படுத்தி மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இரண்டாவதுகட்ட போர் நிறுத்தத்தில் மீதமுள்ளோரில் பாதி பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். நிரந்தர போர் நிறுத்தம் குறித்து உடன்பாடு எட்டப்படும்போது மீதமுள்ளவர்களையும் விடுவிக்கும் என்று நேற்று முன்தினம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
The post போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம்: காசாவுக்கு உதவிப்பொருட்களை நிறுத்திய இஸ்ரேல் appeared first on Dinakaran.