புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நாட்டின் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. அதன் பின்னர் புரிந்துணர்வு அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது.