பிரபல இந்தி நடிகையான வித்யா பாலன், தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்-பிலும் நான் இடம்பெற்றிருப்பது போல சில வீடியோக்கள் பரவி வருகின்றன. அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ) போலி யாக உருவாக்கப்பட்டவை. அதன் உருவாக்கம் மற்றும் அதைப் பரப்புவதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் விஷயங்கள் எதையும் நான் ஆதரிக்கவில்லை. வீடியோவில் கூறப்படும் எந்த கருத்துக்கும் நான் காரணமல்ல. இதுபோன்ற வீடியோவை பகிர்வதற்கு முன்பு, ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.