சென்னை: விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார்.